

சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங் கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியாக பதிவை புதுப் பித்து வருபவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங் கப்படுகிறது. 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300 வழங்கப் படுகிறது.
இவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து காத்திருப்ப வராக இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, எம்பிசி, இதர வகுப்பினர் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய இளைஞர்கள், சாந்தோமில் உள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.