

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள். தோல்வி என்றைக்கும் நிரந்தரம் இல்லை. மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது. அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் தேமுதிக வேட்பாளர் உட்பட யாரையும் அனுமதிக்காமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டது கண்டனத்துக்குரியது.
ஆளும்கட்சி வெற்றி பெறுவது என்பது இடைத்தேர்தல்களில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் பெறும் இதுபோன்ற வெற்றிகளைப் பற்றி நாம் அதிகம் யோசிக்கத் தேவையில்லை. இந்த3 தொகுதிகளிலும் அயராது பாடுபட்ட தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் நன்றி. இடைத்தேர்தல் முடிவுகளை பொருட்படுத்தாது, மக்களுக்கான பணியில் என்றும் முழுமூச்சுடன் செயல்படுவோம்.