முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்தேனா? - நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ்

முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்தேனா? - நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ்
Updated on
1 min read

மதுரை: ‘நான் பேரவையில் ஸ்டாலினை சந்தித்ததாகக் குற்றம் சொல்கிறார்கள் .ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகதயார்’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவர் தங்கக் கவச வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம். ஆறுமுக சாமி ஆணையத்தின் அடிப்படையில் சிலர் நீதிமன்றம் செல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த வழக்கு முடியும் வரை அதைப்பற்றி நான் கருத்துக் கூற விருப்பமில்லை. நான் பேரவையில் ஸ்டாலினை சந்தித்ததாகக் குற்றம் சொல்கிறார்கள். முதல்வரை நான் சந்தித்ததாக அவர்கள் நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலக தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் அவர் அரசியலைவிட்டு விலக தயாரா?

அதிமுக என்பது தொண்டர்கள் உருவாக்கிய இயக்கம். அப்படித்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தஇயக்கத்தை உருவாக்கி வழிநடத்தி வந்தார்கள். அதிமுகவின் 50-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் யார் கட்சிக்குள் விருப்பத்தகாத பிரச்சினைகளை உருவாக்கிறார்கள் என்பது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். பாவத்தைச் செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையது அல்ல. ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும் மக்களுக்கும், அரசியல் தெரிந்தவர்களுக்கும் தெரியும். அதிமுக இணையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in