

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி ஒத்தமாந்துறையில் பறக்கும்படையினர் நேற்று நடத் திய சோதனையில் மினி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறு வதையொட்டி தொகுதி முழுவதும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழுவினர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒத்தமாந்துறை சோதனைச் சாவடியில் பறக்கும்படை அலுவ லர் ரமேஷ் தலைமையிலான அலுவலர்கள் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த மினி வேனில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.35 லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், தாராபுரத்தைச் சேர்ந்த சிறுதானிய வியாபாரி பலராமன்(65), திருச்சியில் உள்ள சிறுதானிய மொத்த வியாபாரிக்கு வழங்க வேண்டிய பணத்தை கடை ஊழியர் ரமேஷிடம் கொடுத்து அனுப்பியதாகக் கூறப்பட்டது.
உரிய ஆவணங்கள் இல்லா ததால் அந்தத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் பூபால்சிங் மன்ரால், அஜய் தத்தார்தராயே குல்கர்னி முன்னி லையில், கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.