Published : 10 Nov 2016 08:40 AM
Last Updated : 10 Nov 2016 08:40 AM

ஐநூறும் ஆயிரமும்... அடுக்கடுக்காய் அவஸ்தைகளும்..!

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை

நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பல பெட்ரோல் பங்க்களில் அவற்றை வாங்க மறுத்தனர். சில இடங்களில் ஏடிஎம் கார்டுகளை ஏற்க மறுத்ததுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்.

சென்னை எருக்கஞ்சேரி, கொடுங்கையூர், எம்கேபிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்களில் 100 ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் இருந்தும் 500 ரூபாய் கொடுத்தவர்கள் முழு தொகைக்கும் பெட்ரோல் போட்டாக வேண்டும் என்று வற்புறுத்தப் பட்டனர். அதனால் பங்க் ஊழியர் களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி சில பெட்ரோல் பங்க்களில் ஏடிஎம் கார்டுகளை வாங்க மறுத் தனர். இது தொடர்பாக சிவலிங்கம் என்பவர் கூறும்போது, “கையில் 100 ரூபாய் நோட்டு இல்லாததால் தான் ஏடிஎம் கார்டை கொண்டு வருகிறோம். அதை பயன்படுத்தி பெட்ரோல் போட நேரமில்லை என்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி றார்கள்” என்றார்.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்களில் வாகனங் களுக்கு பெட்ரோல், டீசல் போடு வதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 1 லிட்டர் பெட் ரோல் போடுவதற்கு அனைவரும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொடுப்பதால் ஊழியர்கள் வாங்க மறுத்தனர். இதனால் ஊழியர் களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பல இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் கொண்டுவந்தவர்களை முழு தொகைக்கும் பெட்ரோல் போடுமாறு பங்க் ஊழியர்கள் கட்டாயப்படுத்தினர்.

இதுபற்றி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் மேலாளர் பழனி பாரதி கூறும்போது, “500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பெற் றுக்கொண்டு வாடிக்கையாளர் களுக்கு பெட்ரோல், டீசலை அளிக்கிறோம். அத்தொகைக்கு முழுமையாக எரிபொருள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவ தில்லை. சில்லறை உள்ளவரை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறோம். சில்லறை இல்லாமல் பெட்ரோல் நிரப்ப வரும் தினசரி வாடிக்கையாளர்களிடம் சில்லறை இல்லை என்பதால் பெட்ரோல், டீசல் தரமுடியாது என்று கூற முடியாது. எனவே, அவர்களிடம் உள்ள பணத்தை பெற்றுக்கொண்டு சில்லறையை பிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என கூறிவிடுகிறோம்” என்றார்.

புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில பெட்ரோல் பங்க்களில் சில்லரைக் கொடுப்பதை தவிர்ப் பதற்காக ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. சில இடங்களில் ரூ.500-க்கு 4 லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.

எண்ணெய் நிறுவனம் அறிவிப்பு

இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் பங்கு கள் மற்றும் கேஸ் விநியோக மையங் களில் நாளை (11-ம் தேதி) நள் ளிரவு வரை பெறப்படும். மேலும், பெட்ரோல் தட்டுப்பாடு ஏதும் ஏற் படவில்லை. எனவே பொதுமக்கள் இதுபற்றி அச்சப்படத் தேவை யில்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான வருவாய் இழப்பு

சென்னை

நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப் பால், சென்னையில் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், பல்வேறு தொழில் துறைகள் பாதிப்புக்குள்ளாயின. அதில் ஆட்டோ தொழில் துறையும் ஒன்று. நேற்று முழுவதும் சவாரி இன்றி, கடுமையான வருவாய் இழப்பை சந்தித்திருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், தங்களின் நேற்றைய அனுபவத்தை, ‘தி இந்து’விடம் கூறினர். விவரம்:

சூரியகுமார் (வியாசர்பாடி):

காலையில் வியாசர்பாடியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலை யத்துக்கு ஒரு சவாரியை ஏற்றி வந்தேன். பின்னர் அங்கிருந்து போரூருக்கு ஏற்றிய சவாரி, ரூ.500 நோட்டு மட்டும் வைத்திருப்பது, பாதி வழியில் தான் தெரிந்தது. அதனால் அவரை தேனாம்பேட்டையில் இறக்கிவிட்டேன். இப்படி நேற்று 4 சவாரியை பாதி வழியில் இறக்கி விட்டேன். வடபழனியில் இருந்து மயிலாப்பூர் சென்ற சவாரியை முதலிலேயே ரூ.100 நோட்டு உள்ளதா என கேட்ட பின்னரே சவாரி ஏற்றினேன். இந்த நாளில் எனது வருவாய் ரூ.150 மட்டுமே. அது பெட்ரோலுக்கே செலவானது. இதனால் பிற்பகலுக்கு மேல் ஆட்டோவை இயக்கவில்லை.

டி.ஜெயபால் (எல்லீஸ் சாலை):

வழக்கமாக தினமும் 10 சவாரி செல்வேன். நேற்று பிற்பகல் 2 மணி வரை 2 சவாரி மட்டுமே சென்றேன். வருவோர் எல்லோருமே ரூ.500 நோட்டையே நீட்டுகின்றனர். போதிய சில்லறை இல்லாததால், பல சவாரிகளை தவிர்த்துவிட்டேன்.

கே.அசிம் (வாலாஜா சாலை):

சவாரி வருபவர்கள் ரூ.500 நோட்டு களை நீட்டுவது, அவர்களின் இயல்பு. அதை பெட்ரோல் பங்கு கள், டாஸ்மாக் கடைகள் போன்ற வற்றில் மாற்றி சமாளிப்போம். நேற்று அங்கும் சில்லறை வழங்கப் படவில்லை. அதனால் ஒரு சவாரி யையும் ஏற்றாமல், வருவாய் இழந்து நிற்கிறேன்.

டி.ஆறுமுகம் (சேப்பாக்கம்):

வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்ட தால், ஒரு சவாரியும் வரவில்லை. ரூ.500-க்கு சில்லறை கேட்டுதான் சிலர் வந்தார்கள். சவாரி இல்லாத தால், முகவரி கேட்டு வந்தவர் களுக்கு, பொது சேவையாக வழிகாட்டிக் கொண்டிருந்தோம்.

லிங்கேசன் (மெரினா கடற்கரை):

கையிருப்பில் உள்ள சில்லறையை ஆட்டோவுக்கு அளித்துவிட்டால் மீண்டும் சில்லறை கிடைக்காது என்பதால், பலர் ஆட்டோ பயணத்தை தவிர்த்துவிட்டனர். இதனால், ஆட்டோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

எம்.ஹலீல் (எல்லீஸ் நகர்):

காலையில் இருந்து சவாரியே இல்லை. பொதுவாக ஆட்டோ ஓட்டுநரிடம் சில்லறை பெற்றுக் கொள்ளலாம் என்று பயணிகள் ஆட்டோவில் ஏறுவார்கள். தற் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்பதாலும், ரூ.100 நோட்டுக்கு தட்டுப்பாடு இருப்ப தாலும் பயணிகள் யாருமே ஆட்டோவைத் தேடவில்லை.

ராமு (புதுப்பேட்டை):

ஆட்டோ வுக்கு கஷ்டப்பட்டு பெட்ரோல் போட்டுவிட்டு, காலையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர் என ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகிறேன். பெட்ரோல் தீர்ந்ததுதான் மிச்சம், ஒரு சவாரி கூட ஏறவில்லை.

ஆர்.கிருஷ்ணன் (திருவல்லிக் கேணி):

எங்களுக்கு கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, ரூ.100 அளவில் பெட்ரோல் போடுவோம். நேற்று பெட்ரோல் போட சில்லறை இல்லாத தால், ரூ.500 நீட்டினால், ரூ.500-க்கும் பெட்ரோல் போட்டுக்கொள்ளுமாறு பங்க்களில் அறிவுறுத்தப்பட்டது. எங்கள் ஒரு நாள் வருவாயே அவ்வளவுதான். அதை பெட்ரோ லாக போட்டுக்கொண்டால், மற்ற செலவுக்கு என்ன செய்வது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x