ஆசிரியர் நியமனம் | உச்ச வயது வரம்பு உயர்வு - தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர் நியமனம் | உச்ச வயது வரம்பு உயர்வு - தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45- ஆகவும், இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45-ல் இருந்து 50-ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும். இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in