எடப்பாடி பழனிசாமியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்: சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் 

சிபிஎம் பால கிருஷ்ணன்| கோப்புப் படம்
சிபிஎம் பால கிருஷ்ணன்| கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எந்தவித குற்ற உணர்வும் இல்லாத எடப்பாடி பழனிசாமியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தி நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.

இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மவுனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்று பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்தப் போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்" இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in