திமுகவின் இந்தி எதிர்ப்பு நாடகம் எடுபடாது: வானதி சீனிவாசன் கருத்து

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

திமுகவின் இந்தி எதிர்ப்பு நாடகம் இனி எடுபடாது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை, இந்தி திணிப்பு என திரித்து, சட்டப்பேரவையில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்தான் எங்கள் உயிர் என பேசும் திமுக நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா? தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக திமுக தலைமை வெளியிட வேண்டும்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். பாஜக, இந்திய மொழிகளுக்கு, தாய் மொழிக் கல்விக்கு ஆதரவாக நிற்கிறதே தவிர, இந்தி மொழிக்கு அல்ல. இந்த உண்மையை தமிழக மக்கள் நன்கறிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in