Published : 19 Oct 2022 06:52 AM
Last Updated : 19 Oct 2022 06:52 AM
சென்னை: சட்டப்பேரவையில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் க.அசோகன் பேசும்போது,”சிவகாசியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: திருப்பூரில் ரூ.95 கோடியில் உயர் தொழில்நுட்பம் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீ பெரும்புதூரில் ரூ.146 கோடி மதிப்பிலும், தூத்துக் குடியில் ரூ.178 கோடியிலும் இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல், ராணிப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் தலா 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.
சிவகாசியில் 1,050 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 56 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிச்சயமாக இவர்களுக்கு உதவும் வகையில், முதல்வரிடம் கலந்து பேசி, விரைவில் சிவகாசியில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT