அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வேலைநிறுத்தம் செய்வதா?- பெப்சி தலைவருக்கு ஒளிப்பதிவாளர் சங்கம் எதிர்ப்பு

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வேலைநிறுத்தம் செய்வதா?- பெப்சி தலைவருக்கு ஒளிப்பதிவாளர் சங்கம் எதிர்ப்பு
Updated on
1 min read

பெப்சி தலைவர் ஜி.சிவா அவரது அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி, ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தது வருந்தத்தக்கது என்று ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தெரி வித்துள்ளது.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர் கள் சங்கத்தின் (சைகா) விருது நிகழ்ச்சி மலேசியாவில் 2015-ல் நடந்தது. இந்த கணக்குகள் தொடர் பாக சங்கத் தலைவர் பி.சி.ராம் சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

இதையடுத்து, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேள னத்தின் (பெப்சி) தலைவர் ஜி.சிவா மீது அபாண்டமாக குற்றம் சாட்டப் பட்டிருப்பதாக கூறி, சென்னையில் படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்பட பணிகள் நேற்று ஒருநாள் நடக்காது என்று பெப்சி அறிவித்தது.

இந்நிலையில், ‘சைகா’ பொதுச் செயலாளர் பி.கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மலேசிய விருது நிகழ்ச்சியை ஒளிபரப்ப தனியார் தொலைக்காட் சிக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதற்காக பெறப்பட்ட தொகை யில் ரூ.40 லட்சத்துக்கு ரசீதுகள், ஆவணங்கள் இல்லை. இதுதொடர் பாக விளக்கம் கேட்டு முன்னாள் தலைவர் விஸ்வநாதன், முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.சிவா, முன் னாள் பொருளாளர் செல்வ ராஜுக்கு பலமுறை கடிதம் அனுப்பி யும், அவர்கள் ஆவணங்களைத் தரவில்லை.

இதனால்தான், நிர்வாக ரீதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காவல் ஆணையரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பெப்சி தலைவராக உள்ள ஜி.சிவா அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஒருநாள் வேலை நிறுத்தம் செய்த இந்த செயல் வருந்தத்தக்கது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கும் என்பதால் இதுபோன்ற வேலை நிறுத்தத்தை ‘சைகா’ ஆதரிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in