

சென்னை மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் வரிகளை பணமாக பெறும் நடைமுறை தற்போது இல்லை. இந்நிலையில் மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு களை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் வரிகளை செலுத்தலாம் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பழைய நோட்டுகளைக் கொண்டு, சொத்து வரி, தொழில் வரிகள் மற்றும் கட்டணங்களை பொது மக்கள் செலுத்துவதற்காக கடந்த 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 446 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.
இந்நிலையில் பழைய நோட்டுகளை வாங்குவதற் கான அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு, வரும் டிசம்பர் 15 வரை (ஞாயிற்றுக்கிழமைகள், டிச.12 நீங்கலாக) மாநகராட்சி வரிகளை செலுத்தலாம்.