Published : 18 Oct 2022 07:54 PM
Last Updated : 18 Oct 2022 07:54 PM

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை முன்னிட்டு கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கபட உள்ளதால் கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் :

அரசு பேருந்துகள் வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை, அருகில் மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களில் நிறுத்திவைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட், E-ரோட்டில் உள்ள நிறுத்தத்திலிருந்து, B-ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை, (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.

100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் EVR சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3வது அவென்யூ, 2வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் EVR சாலையில் மதுரவாயில் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது மெயின் ரோடு, 2வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம்.எம்.டிஏ காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுநர்கள் ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக NH 45 செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x