Published : 18 Oct 2022 06:04 AM
Last Updated : 18 Oct 2022 06:04 AM
சென்னை: அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்றும் நாளையும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), சிந்தனைச் செல்வன் (விசிக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அப்பாவு கூறியதாவது: அக்.18, 19 ஆகிய 2 நாட்களும்பேரவைக் கூட்டம் நடக்கும். 18-ம் தேதி (இன்று) நடப்பு 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து, இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்படும்.
19-ம் தேதி (நாளை) கூடுதல் செலவினத்துக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம், அமைச்சரின் பதில் உரை, வாக்கெடுப்பு நடைபெறும். 2 நாட்களும் கேள்வி நேரம் உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஆகியவையும் பேரவையில் வைக்கப்படும். பழனிசாமி, ஓபிஎஸ் அளித்துள்ள கடிதங்களுக்கான பதிலை பேரவையில் நாளை கூறுகிறேன்.
ஓபிஎஸ் பங்கேற்றது ஏன்?
அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினராக ஓபிஎஸ் இருப்பதால், இதில் பங்கேற்றார். அதிமுகவின் 51-வதுஆண்டு விழா கொண்டாடப்படுவதால் மற்ற உறுப்பினர்கள் வரவில்லை என நினைக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT