Published : 18 Oct 2022 06:53 AM
Last Updated : 18 Oct 2022 06:53 AM
சென்னை: தலைமைச் செயலக பணிக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் - 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அமைச்சுப் பணி உதவியாளர்கள் இலவச பயிற்சிக்கு வரும் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தலைவரும், தலைமைச் செயலருமான இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பில்சென்னை பழைய வண்ணாரப்பேட்டைசர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இயங்கும் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ பிரிவில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான 161 காலி இடங்களைஅமைச்சுப் பணி, நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்களை கொண்டு பணிமாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கும் இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்து, பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையத்தில்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரியசான்றிதழ்களுடன், சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையஅலுவலகத்தில் அக்.26-ம் தேதி வரைநேரடியாக வழங்கலாம். ceccnandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT