Published : 30 Nov 2016 09:10 AM
Last Updated : 30 Nov 2016 09:10 AM

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 4 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு

கும்பகோணம் கிருஷ்ணா பள் ளியில் கடந்த 16.7.2004-ல் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர்.

இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி உள்ளிட்டோ ருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து விசா ரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் புலவர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரும் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யவும், அதற்கு முன் தங்களின் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. பள்ளித் தாளாளர் புலவர் பழனிச் சாமி, சமையல் அமைப்பா ளர் விஜயலெட்சுமி, சமையலர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந் திரன் ஆகியோரின் தண்ட னையை நிறுத்திவைத்து, அவர் களை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே தலைமை ஆசிரியை சாந்த லெட்சுமி, கல்வித் துறை அலு வலர்கள் தாண்டவன், பாலாஜி, சிவபிரகாசம், துரைராஜ் ஆகி யோரின் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x