Published : 18 Oct 2022 04:30 AM
Last Updated : 18 Oct 2022 04:30 AM

கடலூர் | கம்மாபுரம் அரசுப் பள்ளியில் கழிப்பறை இல்லாததால் கடும் அவதி

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,300மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 10-ம்வகுப்புகள், கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே இயங்கி வருகிறது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடைபெறும் பள்ளி வளாகத்தில் மாணவியருக்கு கழிப்பறை உள்ள நிலையில், மாணவர்களுக்கு கழிப்பறை இல்லாததால், அவர்கள் இடைவேளையின் போது, அருகிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் திறந்த வெளிப் பகுதியில் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துர்நாற்றம் வீசுவதால், அந்த அலுவலக ஊழியர்கள், மாணவர்களை உள்ளே அனுமதி மறுக்கும்போது, அவர்கள் சாலையை கடந்து சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும், பள்ளி வளாகத்தில் கழிப்பறைக் கட்டித்தர தலைமையாசிரியரிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை கட்டித் தராததால், திறந்த வெளியைப் பயன்படுத்துகிறோம் என மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் அசோக்கிடம் கேட்டபோது, “பள்ளி வளாகத்தில் போதுமான இடமில்லை. எனவே ஆரம்ப சுகாதாரம் நிலையம் உள்ள பகுதியில் 12 வகுப்பறைகள் கட்டி, கழிப்பறைக் கட்டித் தர நாங்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆட்சியருக்கு தெரிவித்து விட்டோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆட்சியருக்கு தெரிவித்து விட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x