

காடுவெட்டி குரு மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பனங் காட்டுகுப்பம் கிராமத்தில் 2012 ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாக பேசியதாக தாழம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகு மாறு குருவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் வழக்கு விசார ணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், மனுதாரருக்கு எதிரான வழக்கை விசாரிக்க செங்கல்பட்டு குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்துக்கு தடை விதித்தும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து குரு வுக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.