கொலையா? தற்கொலையா? - நடிகை மரணம் குறித்து தீவிர விசாரணை

கொலையா? தற்கொலையா? - நடிகை மரணம் குறித்து தீவிர விசாரணை
Updated on
1 min read

அடுக்குமாடியில் சடலமாக கிடந்த நடிகை சபர்ணாவின் மரணம் குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்தவர் சபர்ணா. சினிமா மற்றும் தொலைக் காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். நேற்று முன்தினம் இவர் மதுரவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

சபர்ணாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சபர்ணா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது பற்றி மதுரவாயல் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in