அதிமுகவைச் சேர்ந்த சிலர் திமுகவுடன் கைகோர்ப்பு: தங்கமணி வேதனை

நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  பி.தங்கமணி பேசினார்.
நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
Updated on
1 min read

அதிமுகவைச் சேர்ந்த சிலர் திமுகவுடன் கைகோத்துக் கொண்டு அக்கட்சியின் ‘பி’ டீமாக செயல்பட்டு வருகின்றனர், என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல்லில் அதிமுக நகர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

அதிமுகவில் சிறிது தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சிலர் திமுகவுடன் கைகோத்துக் கொண்டு அதிமுகவை ஒழித்து விட்டால் நம் மீது வழக்கு வராது என திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார்.

அந்த எதிர்ப்பில் இருந்து கொஞ்சம் கூட பின் வாங்கக் கூடாது. திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் இந்தி திணிப்பைப் பற்றி பேசாமல் என்னைப் பற்றி பேசியுள்ளார். ஒன்றரை ஆண்டு திமுக செய்த சாதனையையும், 10 ஆண்டுகள் அதிமுக செய்த சாதனையையும் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in