காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் - எடப்பாடி சாலை துண்டிப்பு

காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் - எடப்பாடி சாலை துண்டிப்பு
Updated on
1 min read

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், மேட்டூர் - எடப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சங்கிலி முனியப்பன் கோயில், ரெட்டியூர், கோல் நாய்க்கன்பட்டி, தெக்கத்திக்காடு, பூலாம்பட்டி, எடப்பாடி உள்ளட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால், நெல், வாழை, பருத்தி பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் மாதையன் குட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெரியதண்டாவில் தொல்லிக்காரன் என்பவருக்குச் சொந்தமான 15 வெள்ளாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டன. அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான இரண்டுவெள்ளாடு, 2 மாடு, ஒரு கன்றுக்குட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

பூலாம்பட்டி - நெரிஞ்சிப்பேட்டை இடையே படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in