Published : 17 Oct 2022 04:05 AM
Last Updated : 17 Oct 2022 04:05 AM

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வேலு பங்கேற்ற அரசு விழாவில் கண்ணியத்தை காற்றில் பறக்க விட்ட திமுகவினர்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றும் அமைச்சர் எ.வ.வேலு.

கள்ளக்குறிச்சி

ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பால் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர், இயக்குநர்கள் என மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பு விழாகள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:

கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 73 ஆயிரம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்கிறது. 3,000 லிட்டர் உள்ளூர் விற்பனை போக, மீதமுள்ள பால் இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்கான அனைத்து வளர்ச்சி பணிகளும், முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாகசெயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட மாவட்டஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகம் விரைவில் கட்டுவதற் கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த மாவட்டத் தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள்,ஆட்சியர் விடுத்த வேண்டுகோளுக் கிணங்க தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, இந்து சமய அறநிலைத்துறை, தற்போது பால்வளத்துறை உள் ளிட்ட துறை அலுவலகங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் பதவியேற்ற உடனேயே முதலில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, அறநிலையத் துறையை பிரித்து, இம் மாவட்டத்திற்கு கொண்டு வந் தேன்.

ஆன்மீகத்தின் ஈடுபாடு கொண்டிருப்பதால் தான், அறநிலையத் துறை மூலம் அந்தந்த கிராமப் பகுதியிலுள்ள கோயில்கள் புனரமைக்கப்பட்டு சீர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திராடவிட மாடல் ஆட்சியும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சி தான் என பேசினார். இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பெ.புவனேஸ் வரி, கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் ரா.சுப்ராயலு, துணைப்பதிவாளர் (பால்வளம்) கோ.நாகராஜ் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் கூட்ட நெரிசல்: அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்கிறேன் என்ற பெயரில், திமுகவினர் போட்டி போட்டு, சால்வை அணிவித்தும், பூங் கொத்து கொடுத்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்க அவரை நெருங்கினர். நெரிசலுக்கு இடையே அவர் விழா மேடைக்கு வந்தார். மேடையில் திமுகவினர் திரளாக ஏறி நின்றனர்.

மேடைக்கு முன்புறம் இருந்த கூட்டத்தை விட, மேடையில் நிற்போரின் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், உதய சூரியன் ஆகியோர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து, "இது கட்சி நிகழ்ச்சியல்ல. அரசு நிகழ்ச்சி. எனவே கட்சியினர் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" எனக்கூறினர்.

ஆனாலும், மேடையில்இருந்தவர்கள் கீழே இறங்காத தால், அவர்களை துரத்தாத குறை யாக, கீழே இறக்கிவிட்டனர். பதவியேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, திமுகவினர் ஒன்று கூடி செல்போனில் படம்எடுப்பதிலும், கோஷம் போடுவதி லும் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த எம்எல்ஏ கார்த்திகேயன், சத்தம் போடாதீர்கள் என அவ்வப்போது அவர்களை பார்த்து கை அசைத்து, சைகை கொடுத்துக் கொண்டே இருந்தார். கட்சியினரின் செயல் பாட்டில் மாவட்ட எம்எல்ஏ-க்களிடம் அமைச்சர் வேலு அதிருப்தியை தெரிவித்துவிட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x