Published : 16 Oct 2022 10:02 AM
Last Updated : 16 Oct 2022 10:02 AM

சாதி சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகனின் மனைவி தற்கொலை முயற்சி

சென்னை நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனின் இரு மனைவிகளில் ஒருவர் நேற்று தற்கொலைக்கு முயன்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் படப்பை சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். அதில் ஒருவர் சித்ரா.

இவரது மகனுக்குதான் எஸ்டி சாதிச் சான்றிதழ் கோரியதற்கு அதிகாரிகள் அலைக்கழித்ததாக் கூறி, வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா மாவட்ட ஆட்சியர்மா.ஆர்த்தியை சந்தித்து தனது குடும்பத்துக்கு உதவக்கோரி மனு அளித்தார். உரிய உதவிகள் செய்வதாக ஆட்சியரும் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் சித்ரா நேற்று வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கணவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் மனைவியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x