

சென்னை ஐஐடி-யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகளை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த 8 பேர் மீதும் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குகள் உள்ளன என்பதும், அவர்கள் சிறை யில் தலைமைக் காவலர்களை கொன்றவர்கள் என்பதும் உண்மைதான்.ஆனால், சிறையில் இருந்து தப்பிய 8 பேரையும் உயிரோடு பிடித் திருக்க வேண்டும். அப்படி கைது செய்திருந்தால் பாதுகாப்பான சிறையில் இருந்து எப்படி தப்பி னார்கள் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது தெரிய வந்திருக்கும். 8 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது உண்மையான என்கவுன்ட்டரா, போலியா என்ற சந்தேகம் பலருக்கும் வலுத்துள்ளது.
எனவேதான், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி யது. முதலில் மறுத்த மத்தியப்பிரதேச பாஜக அரசு, தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை யிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதை முதலிலேயே செய்திருக்கலாம். மல்லுக் கட்டினால் இந்த அரசு கேட்கிறது. 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை கோரினாலே தேசத் துரோகம் என மத்திய அரசு கூறுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டம் கடந்த காங்கிரஸ் கூட் டணி ஆட்சியில் நான் நிதியமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்டது. இதை நடைமுறைப் படுத்த பாஜக அரசு தாமதப்படுத்தி வருகிறது. தற் போது ஜிஎஸ்டியில் 5 விதமான வரி விதிப்பு முறை கொண்டு வரப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என காங் கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தொழில் தொடங்குவதற்கான தரவரிசை பட்டியலில் தமிழகம் 18-வது இடத்தில் உள்ளது. இது கவலை அளிக்கும் விஷயமாகும் என்றார்.