

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை தடுக்க தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனை நடத்துவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தீபாவளி வசூலைத் தடுக்கும் வகையில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், டாஸ்மாக், போக்குவரத்துத்துறை, மின்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த 27 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.