Published : 05 Nov 2016 09:04 AM
Last Updated : 05 Nov 2016 09:04 AM

ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கோஷ்டிகளை மறந்து ஒன்றுதிரண்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள்

ராகுல் காந்தி கைது செய்யப் பட்டதைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டிகளை மறந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங் கேற்றனர்.

ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் சில மாற்றங்கள் கோரி டெல்லியில் சமீபத்தில் போராட்டம் நடந்த போது, ராம்கிஷண் கிரிவால் என்ற முன்னாள் வீரர் தற்கொலை செய்துகொண்டார். அவரது குடும் பத்தினருக்கு ஆறுதல் கூற மருத் துவமனைக்குச் சென்ற காங்கிரஸ் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராகுல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன், தேசிய செயலாளர் டாக்டர் ஏ.செல்லக்குமார், தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மகளிர் காங் கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் நக்மா, மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக் கரசர் பேசியதாவது:

முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்த லுக்கு முன்பு நரேந்திர மோடி வாக் குறுதி அளித்தார். அவர் பிரதமராகி 28 மாதங்களாகியும் அதை செயல் படுத்தவில்லை. இதைக் கண்டித்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைப் பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தி சில மணி நேரங்கள் காவல் நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் ஜனநாயகக் கடமையாற்றச் சென்ற ராகுல் காந்தி மீது மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது கண்டனத்துக்குரியது.

தமிழக காங்கிரஸில் ஒற்றுமை இல்லை; பல கோஷ்டிகளாக உள் ளது என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அவர்கள் இந்த மேடை யைப் பார்த்தால் காங்கிரஸின் ஒற்றுமையைப் புரிந்துகொள்வார் கள். யாரையும் இணைக்கும் சக்தி ராகுல் காந்திக்கு உண்டு. நாட்டிலேயே மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் அவர் மட்டுமே.

பிரதமராக இருந்த தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள். அதுபோல, பிரதமர் மோடிக்கும் மக்கள் செல்வாக்கு கிடையாது. குஜராத்தில் ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியராக தோளில் மஞ்சள் பையோடு சுற்றிவந்தவர். உள்நாட் டைப் பற்றி எதுவும் அறியாதவர். அதனால்தான், இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில் அதிகம் சுற்றுகிறார். நாட்டின் பிரச்சினைகளை அறியாமல் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். அவரது ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, ‘‘இறந்தவரின் உட லைப் பார்க்க எதிரிகளைக்கூட அனுமதிப்பதுதான் நமது பண்பு. தற்கொலை செய்துகொண்ட முன் னாள் ராணுவ வீரரின் உடலைப் பார்க்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்து கைது செய்துள்ளது மோடி அரசு. இது கண்டனத்துக்குரியது. ‘ராகுல் சிறுவன், காங்கிரஸ் செத் துப்போன கட்சி’ என்று சிலர் ஏள னம் செய்கின்றனர். இதெல்லாம் இன்னும் இரண்டரை ஆண்டு களுக்குத்தான். 2019-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். பிரதமராக ராகுல் காந்தி டெல்லி செங்கோட் டையில் தேசியக் கொடியேற்று வார்’’ என்றார்

கோஷ்டிகளை மறந்து காங் கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்றது கட்சித் தொண்டர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x