முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை

முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண் காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அண்மையில் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

முதல்வருக்கு பெண் பிசியோ தெரபி நிபுணர் ஒருவர் தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார். முதல்வர் இயற்கையாக சுவாசிக்கத் தொடங்கியுள்ளதால், தேவைப்படும்போது மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில், உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு திட உணவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

‘முதல்வர் பூரண நலத்துடன் உள் ளார். 90 சதவீதம் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார். முதல்வர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வீட்டுக்கு செல்லலாம்’ என்று அப் போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்திருந்தார். முதல்வரின் உடல்நிலையை மூத்த டாக்டர்கள் குழு கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மருத்துவ மனைக்கு வந்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, முதல்வரின் உடல் நிலை பற்றி அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்துச் சென்றார். முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி அண்ணா தொழிற்சங்கத்தை (மின்சாரப் பிரிவு) சேர்ந்த 70 பேர் தருமபுரியில் இருந்து பாத யாத்திரையாக மருத்துவ மனைக்கு வந்தனர். வழியில் கோயில்களில் பூஜைகள் செய்து எடுத்து வந்த பிரசாதத்தை அதிமுக நிர்வாகிகளிடம் கொடுத்தனர். தமிழக மசூதிகள் கூட் டமைப்பு தலைவர் முகமது சிக்கந்தர் தலைமையில் மருத்துவ மனைக்கு வந்த நிர்வாகிகள், முதல்வர் பூரண நலம்பெற வேண்டி மதினாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in