15-வது காமன்வெல்த் சட்டக் கல்வி சங்க விவாத போட்டி: வேல்ஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் நடைபெற்றது

15-வது காமன்வெல்த் சட்டக் கல்வி சங்க விவாத போட்டி: வேல்ஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் நடைபெற்றது
Updated on
1 min read

வேல்ஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் 15-வது காமன் வெல்த் சட்டக் கல்வி சங்க விவாத போட்டி நடைபெற்றது.

காமன்வெல்த் சட்டக் கல்வி சங்க (சிஎல்இஏ) சார்பில் ஆண்டுக்கு இரு முறை விவாத போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ஆசிய-இந்திய தேசிய சுற்று வேல்ஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் நவ.12, 13 தேதிகளில் நடைபெற்றது. இந்தியா முழுவதுமிருந்து பல் வேறு குழுக்கள் இதில் பங்கேற் றன.

நடுவர்களாக நீதிபதிகள்

ஆராய்ச்சி நுட்பம், பேச்சுத் திறமை, நீதிமன்ற அறையில் வீரமாக விவாதிக்கும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நடுவர்களாக புகழ்பெற்ற நீதிபதிகள் பங்கேற் றனர். முன்னணி சட்ட நிறுவனங் கள், தேசிய சட்ட பல்கலைக் கழகங்கள், இந்தியாவில் உள்ள பல்வேறு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த 20 குழுக்கள் போட்டியில் கலந்துகொண்டன.

8 குழுக்கள் தேர்வு

சிஎல்இஏ நடத்தும் இந்த விவாதப் போட்டியை தன்னாட்சி பெற்ற பல்கலைக் கழகமான வேல்ஸ் பல்கலைக் கழகம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். விவாதங்களுக் காக நீதிமன்ற அறைகளைப் போன்ற வசதிகளுடன் 10 அறை கள் அமைக்கப்பட்டிருந்தன. 20 குழுக்களில் 8 குழுக்கள் காலிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.

நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி கலந்துகொண்டு உரையாற்றினார். வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கே.கணேஷ் வரவேற்றார்.

வெற்றியாளர்கள் தேர்வு

இறுதிப் போட்டியில் காந்திநகரில் உள்ள குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது. டேராடூனில் உள்ள பெட்ரோலியம் எரிசக்தி பல்கலைக்கழக சட்ட கல்லூரி இரண்டாமிடம் பெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஜி.ஜெயச்சந்திரன், சென்னை பல்கலை. சட்டக் கல்வித்துறை தலைவர் ஏ.டேவிட் அம்புரோஸ் ஆகியோர் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன், வேல்ஸ் பல்கலை. துணைத் தலைவர் ஏ.ஜோதிமுருகன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in