டிசம்பர் மாதம் வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் ரத்து: கட்டுப்பாடின்றி பயன்படுத்தலாம்

டிசம்பர் மாதம் வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் ரத்து: கட்டுப்பாடின்றி பயன்படுத்தலாம்
Updated on
1 min read

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஏடிஎம் கார்டு பயன்படுத்துவதற்கான சேவைக் கட்டணம் டிசம்பர் மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் கூட்டம் அலைமோது கிறது. காலாவதியான நோட்டு களை பயன்படுத்த முடியாததால், கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் 2 நாட்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஏடிஎம்கள் நேற்று ஓரளவு திறக்கப்பட்டதால் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை எடுத்து வருகின்றனர்.

பெரும்பாலான வங்கிகளில் டெபிட் கார்டை அந்தந்த வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் இலவசமாக பயன் படுத்தலாம். அதற்கு மேல் பயன் படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.20 சேவைக் கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

தற்போதைய சூழலில், கடை களில் மாற்றுவதற்கு வசதியாக 100 ரூபாய் நோட்டுகளைத்தான் மக்கள் ஏடிஎம்களில் அதிகம் எடுக்க விரும்புகின்றனர்.

அதனால், பலமுறை டெபிட் கார்டை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, எத்தனை முறை டெபிட் கார்டை பயன்படுத்தினாலும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வங்கி அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து வங்கி அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பொது மக்கள் நலன் கருதி, டிசம்பர் மாதம் வரை பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்கள் மட்டுமின்றி பிற வங்கிகளின் ஏடிஎம் மையங் களில் இருந்தும் பணத்தை எடுக்கலாம்.

எத்தனை முறை டெபிட் கார்டை பயன்படுத்தினாலும், எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in