புதுச்சேரி | கைரேகை மூலம் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வருக்காக காத்திருந்து ஏமாற்றம்

'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக கைரேகை பதிவு விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்.
'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக கைரேகை பதிவு விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி: கைரேகை பதிவு விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். இந்நிகழ்வுக்கு முதல்வர் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில் மாலை வரை காத்திருந்தும் வராத தால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். புதுச்சேரி அரசுப் பள்ளிக் கல்வி இயக்ககம் பாகூர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் கலாம் உலக சாதனை நிறுவனம் சார்பில் 'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக கைரேகை பதிவு விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்வு நடைபெற்றது.

பாகூர் கமலாநேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 126 மாணவர்கள் கலந்து கொண்டு 210 சார்ட்டுகளில் தங்களது கட்டைவிரல் கைரேகைகளை பதித்து 'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற தலைப் பிலான ஓவியத்தை சுமார் 750 சதுர அடியில் வரைந்து சாதனை படைத்தனர். இந்நிகழ்வுக்காக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் ஆகியோர் காலை 10 மணிக்கு பங்கேற்பார்கள் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்மாலை வரை அவர்கள் வர வில்லை.

சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியைகள் சினிமா பாடல்களை பாடி இருக்கையில் அமர வைக்க முயற்சித்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்து மாணவர்கள் சோர்வுற்றனர். பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களை கவுரவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in