

ஊழல் குற்றச்சாட்டில், கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கோவையில் உள்ள அண்ணா பல் கலைக்கழகத்தில் 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். அவரது பணிக்காலத்தின்போது, பல் கலைக்கழகத்துக்கு மேஜை, நாற்காலிகள் வாங்கப்பட்டன. இதற்காக, தனியார் பர்னிச்சர் நிறுவன உரிமையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.30 கோடி சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தி, ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற் றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.