சென்னை | சாதி சான்றிதழ் வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

சென்னை | சாதி சான்றிதழ் வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் தீக்குளிப்பு
Updated on
1 min read

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையம் அருகே, மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த தன் இனத்தினருக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என கூறியவாறு தயாராக கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உயர் நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினகரன் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் வேல்முருகன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். பின்னர், ஆம்புலன்ஸை வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீக்குளிப்பு விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக வேல்முருகன் கோரிக்கையின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in