

சென்னை: வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனது தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார்.
மாற்றுக் கட்சிகளில் இருந்தபோதும், திமுகவில் இணைந்த பின்பும் என எப்போதுமே அவர் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் ஆவார். கோவை தங்கம் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.