Published : 12 Oct 2022 04:15 AM
Last Updated : 12 Oct 2022 04:15 AM
கரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மெள்ள மீண்டுவர தொடங்கியுள்ளது. தற்போது தினமும் 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2021-22 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 3127 விமானங்களும், சர்வதேச பிரிவில் 131 விமானங்களும் என 3,258 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 6,862 விமானங்களும், சர்வதேச பிரிவில் 520 விமானங்களும் என 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,460 விமானங் கள் இயக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கோவை மட்டுமின்றி நாடு முழுவதும் விமான போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விழாகாலம் வரவிருப்பதால் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை யும் எதிர்வரும் மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT