

அரசு அனுமதித்த நேரத்தில் மட் டுமே டாஸ்மாக் பார் திறக்க வேண்டும் என்றும் அதை மீறும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் உள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், காட்டாங் கொளத்தூர், பொத்தேரி உட்பட பல்வேறு இடங்களில் அரசு டாஸ் மாக் கடை மற்றும் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. அரசு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற் பனையாளர்களுக்கான ஆலோ சனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளர் முகிலன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் போது, “அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே டாஸ்மாக் பார் செயல்பட வேண்டும். பார் உரிமையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்வதை தவிர்க்கவேண்டும் இதனை மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், பாரில் இரவில் காவலர்களை நியமிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நேரமான மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டும் மதுபான விற்பனை செய்யவேண்டும், விற்பனை பணத்தை உரிய நேரத்தில் வங்கியில் செலுத்தவேண்டும், பணத்தை இரவு நேரத்தில் கடையில் வைக்கக்கூடாது. சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார்