

சென்னை: சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இணை ஆணையர் பொ.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ பட்டர், கே.சந்திரசேகரபட்டர் பங்கேற்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், விருதுநகர் மாவட்டம்சின்னவாடி சென்னகேசவப் பெருமாள் கோயில், சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிகாலகஸ்தீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உட்பட 92 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு இக்கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.