

சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த தனியார் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டதில் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.
11 பேர் பலியான சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மீட்பு பணி மற்றும் இடிபாடு களை அகற்றும் பணியை துரிதப் படுத்தினார். இரு பொக்லைன்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப் பட்டன. விபத்து நடந்த பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறிய தாவது: மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், சுற்றுச் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான தகவல் தாமதமாகவே கிடைத்தது. தகவல் கிடைத்த உடன் காவல் துறை, தீயணைப்பு வீரர்கள், வருவாய் துறையினர், மருத்துவக் குழுவினர், சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தகவல் தாமதமாக கிடைத்த தால், 11 பேரை சடலமாகவே மீட்க முடிந்தது. காயமடைந்த நாக ராஜ் சென்னை ஸ்டான்லி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளார்.
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அவர் களின் உறவினர்களிடம் ஒப்படைப் பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கி உள்ளது. விபத்து நடந்த சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டதில் விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார் அவர்.
அதிகாரிகள் குவிந்தனர்
பால்வளத் துறை அமைச்சர் மூர்த்தி, திருவள் ளூர் எம்பி வேணுகோபால், மருத்துவ கல்வி இயக்குநர் கீதா லட்சுமி, ஏடிஜிபி ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா, காஞ்சிபுரம் டிஐஜி சத்தியமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர். மீட்பு பணி, இடிபாடு அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அனுமதி பெறவில்லை
விபத்தை ஏற்படுத்திய சேமிப்பு கிடங்குகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளன என்றும், இதை அமைக்க ஊராட்சியில் உரிய அனுமதி பெறவில்லை எனவும் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாவின் கணவர் சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் நடேசன் கூறுகை யில், உப்பரபாளையம் மட்டுமல் லாமல் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் உள் ளன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள இந்த கிடங்குகளில் பெரும்பாலானவை அரசு அனுமதி பெறாமலேயே இயங்கி வருகின்றன. இந்த கிடங்குகளில் அவசரகால உபகரணங்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.
சுவர்கள் இடிப்பு
11 பேர் உயிரை பறித்த தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கு சுற்றுச் சுவரின் எஞ்சிய பகுதியை வரு வாய் துறையினர் அதிரடியாக அகற்றினர். முன்னதாக விபத்து பகுதியில், மாவட்ட ஆட்சி யர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது, விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரின் பகுதிகள் இருந்தால், மேலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில்கொண்டு எஞ்சிய சுவர்களையும் இடித்து தள்ளினர்.