

நாகை மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயிகள் பலர் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்துள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும் பத்தினரை, திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நாகை மாவட்டத்தில் உயிரிழந்த எரவாஞ்சேரி ஊராட்சி பரங்கிமலை ஜெயபால் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின், அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதேபோல உயிரிழந்த விவ சாயிகளான, சிக்கல் அருகே உள்ள தேமங்கலம் தெற்குவெளியைச் சேர்ந்த அந்தோனிசாமி, கீழ்வேளுர் அருகே உள்ள கீழகாவாளகுடி நவநீதம், வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு ரத்தினவேல், தலைஞாயிறு பிரிஞ்சிமூலை முருகையன், தலைஞாயிறு பாலசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரகுநாதபுரத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி கோவிந்தராஜ், அதிர்ச்சியில் உயிரி ழந்த ஆதிச்சபுரம் அழகேசன் ஆகியோரின் வீடுகளுக்கும் சென்ற ஸ்டாலின், விவசாயிகளின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.
அதன்பின், செய்தியாளர்களி டம் ஸ்டாலின் கூறியதாவது: சம்பா சாகுபடி பொய்த்துப் போனதால், இதுவரை 14 விவசாயிகள் உயிரி ழந்துள்ளனர். ஆனால், அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறும்படி, அவர்களது குடும்பத் தினரை அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளனர். இப்படி ஆட்சி அதி காரத்துக்கு கட்டுப்பட்டு, விவ சாயிகளின் மரணத்தை கொச்சைப் படுத்துவதை அதிகாரிகள் நிறுத் திக்கொள்ள வேண்டும். தமிழ கத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை மத்திய நிபுணர் குழுவும், தமிழக அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டும், இதுவரை விவ சாயிகளுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. இனியும் விவ சாயிகள் தற்கொலை முயற்சி களில் ஈடுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.