காட்பாடியில் சிக்னலை சேதப்படுத்தி துணிகரம்: 2 ரயில்களில் பெண்களிடம் நகை கொள்ளை - வடமாநில கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

காட்பாடியில் சிக்னலை சேதப்படுத்தி துணிகரம்: 2 ரயில்களில் பெண்களிடம் நகை கொள்ளை - வடமாநில கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
Updated on
2 min read

காட்பாடியில் சிக்னல் பெட்டியை சேதப்படுத்தி, 2 விரைவு ரயில்களை நிறுத்திய கொள்ளையர்கள், பெண் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த சம்பவத் தில் தொடர்புடைய வடமாநில கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் நீலகிரி விரைவு ரயில் (புளூ மவுன்டன் எக்ஸ்பிரஸ்), காட்பாடி ரயில் நிலையத்துக்கு 2 கி.மீ. தொலைவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிக்னலுக்காக நின்றது. ரயில் புறப்படும் நேரத்தில் முகமூடி அணிந்த 3 பேர் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினர். கத்தியைக் காட்டி மிரட்டி, 2 பெண்களின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பினர்.

சற்று நேரத்தில் அதே இடத்தில் மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி விரைவு ரயில் சிக்னலுக்காக நின்றது. அப்போதும் ரயில் புறப்படும் நேரத்தில் மூகமூடியுடன் ஏறிய கும்பல், பெண்களின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பியது.

4 பெண்களிடம் செயின் பறிப்பு

அடுத்தடுத்த சம்பவங்களில் நகைகளை பறிகொடுத்த பெண் பயணிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் தகவல் தெரிவித் தனர். மொத்தம், 4 பெண்களிடம் 13 பவுன் நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையர் அஷ்ரப், உதவி ஆணையர் சாய் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் 2 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பாக, ரயில்வே போலீஸார் கூறியதாவது:

சிக்னல் பெட்டியை கொள்ளை யர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மின் இணைப்புகளை மாற்றி சிக்னலை இயக்கி 2 ரயிலையும் நிறுத்தியுள்ளனர். சிக்னலுக்காக நின்ற இடத்தில் ரயிலில் ஏறி கத்தியைக் காட்டி மிரட்டி, பெண் களின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் ஈடுபட்டு வந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தோம். அவர்களில், 6 பேர் கடந்த 5 வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களைப் பிடிப்பதற்கான நீதிமன்ற ஆணையுடன் ஜோலார் பேட்டை ரயில்வே போலீஸார் உத்தரப்பிரதேசம் சென்றனர். அங்கு அவர்கள் இல்லை. எனவே, காட்பாடியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. சிக்னல் பெட்டி களை சேதப்படுத்தி ரயில்களை நிறுத்தி கொள்ளையடிப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இவர்கள் மீது காட்பாடி, ஜோலார் பேட்டை, குண்டூர் ரயில்வே காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

கொள்ளை சம்பவத்தை அடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர்களைப் பிடிக்க 3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன. கொள்ளை சம்பவம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் படும். மேலும், தண்டவாளங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட போலீஸாரின் உதவியை கேட்டுள்ளோம். ஒரு கம்பெனி (60 பேர்) போலீஸாரை பாதுகாப்புக்காக அனுப்பியுள் ளனர். இவர்கள், ரயில்வே போலீஸாருடன் இணைந்து தினமும் இரவு நேரத்தில் ரயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். 1512 என்ற எண்ணில் பயணிகள் எந்த நேரத்திலும் உதவிக்கு அழைக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in