

எல்காட் துணை மேலாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர் (கிரேடு-2) பதவியில் 12 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜூலை 2, 3-ம் தேதிகளில் எழுத்துத்தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த நிலையில், எழுத்துத் தேர்வின் முடிவுகளை நேற்று இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. நேர்முகத் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 35 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 28-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.