அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை: எல்.முருகன் விமர்சனம்

எல்.முருகன் | கோப்புப் படம்
எல்.முருகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை என தேன்கனிக்கோட்டையில் மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற ஸ்ரீராம்ஜோதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 ராம பக்தர்களின் 32-வது ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தேன்கனிக்கோட்டைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் அவருடைய அமைச்சர்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஒரு காட்டாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, பாஜக மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in