

ஓசூர் கசவகட்டா பகுதியில் உள்ள எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி மற்றும் ஓசூர் எம்.எஸ். தோனி குளோபல் பள்ளியும் இணைந்து அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் வகையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை நேற்று (10-ம் தேதி) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார். மேலும், 1,800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாத், பள்ளி நிறுவனர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.