அதிகளவு இரும்புத் தாதுவை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

அதிகளவு இரும்புத் தாதுவை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை
Updated on
1 min read

சென்னை: வெளிநாட்டில் இருந்து ஏபிஜே ஷிரீன் என்ற கப்பல் மூலம், 27,971 டன் எடையுள்ள இரும்புத் தாது துகள்கள் சென்னை துறைமுகத்துக்கு கடந்த 8-ம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த இரும்புத் தாது துகள்களை ஒரே நாளில் கப்பலில் இருந்து இறக்கி கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு 22,686 டன் எடையுள்ள இரும்புத் தாது துகள்கள் ஒரே நாளில் இறக்கி கையாளப்பட்டதுதான் இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது.

இந்த சாதனையை படைத்ததற்காக கப்பல் ஏஜென்ட் ஜே.எம்.பாக்ஸி அண்ட் கோ, இறக்குமதி நிறுவனங்களான டிரான்ஸ்கோல் இம்பெக்ஸ், எம்டிசி பிசினஸ் ஆகிய நிறுவனங்கள், சரக்குகளை கையாண்ட பி.எல். டிரான்ஸ்போர்ட் நிறுவனம், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னைத் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in