

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தகவல்
தண்டரை கிராமத்தில் ஏற்பட்ட தொடர் மரணங்களையடுத்து, 5 சடலங்களைத் தோண்டி எடுத்து சிவகாசி சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருகே உள்ள தண்டரை கிராமத்தில் ரத்த உறவுகளைச் சேர்ந்த 6 பேர், கடந்த அக்டோபர் மாதம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களில் கடைசியாக உயிரி ழந்த மூதாட்டி கிறிஸ்தாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கல்லீ ரல், சிறுநீரகம் மற்றும் ரத்த மாதிரியில் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற நச்சுப் பொருள் கலந்தி ருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து கிராம நிர் வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் பிரிவில் வெறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர் மரணங்கள் குறித்து விசாரிக்க, திரு வண்ணாமலை மாவட்ட கூடு தல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் மேற்பார்வையில் துணை காவல் கண்காணிப் பாளர் தேவநாதன் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட் டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை குறித்து கூடு தல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் நேற்று கூறும் போது, எலிகளைக் கொல்வ தற்கு மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படும். அதே போல், பட்டாசு மருந்துகளிலும் மஞ்சள் பாஸ்பரஸ் இருக்கும். டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டதற்கு பட்டாசு புகையே காரணம் என்று கூறப்பட் டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட வர்களில் பலரின் ரத்தத் தில் மஞ்சள் பாஸ்பரஸ் கலந் திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான விவரங் களையும் சேகரித்து வருகி றோம்.
சிவகாசி சிறப்பு மருத்துவர்
மேலும், சிவகாசியில் உள்ள சிறப்பு மருத்துவர்களுக்கும் அறிக்கை அனுப்பி உள்ளோம். அவர்களை வரவழைத்து ஆய்வு செய்யப்படும். அப் போது, சிவகாசியில் பட்டாசு விபத்துகள் மற்றும் பட்டாசு மருந்துகளால் பாதிக்கப் பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர் கள் முன்னிலையில், மற்ற 5 சடலங்களைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர் மரணங்கள் தற் செயலா? அல்லது திட்டமிட்ட செயலா? என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர் என்றார்.