மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.170 கோடியாக அதிகரிப்பு

மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.170 கோடியாக அதிகரிப்பு
Updated on
1 min read

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் போக்குவரத்தால் வருமானம் ரூ.170 கோடியாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை கோட்டத்திலுள்ள தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவையும், வாடிப்பட்டியில் பகுதியில் இருந்து டிராக்டர்களும் சரக்கு ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றின் வாயிலாக மதுரை கோட்டம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூ.170 கோடி வருமானம் ஈட்டியது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ. 128.44 கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த ஆறு மாத கால சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 413 சரக்கு ரயில்களில் மதுரை கோட்டத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது, இது 614 சரக்கு ரயில்களாக உயர்ந்துள்ளது. இந்த அரையாண்டில் ஒட்டுமொத்த தெற்கு ரயில்வே அளவில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.1766 கோடி கிடைத்துள்ளது. இது, கடந்தாண்டின் அரையாண்டு காலத்தைவிட 17.42 சதவீதமும், ரயில்வே வாரியம் நிர்ணயத்த இலக்கைவிட 38 சதவீதமும் அதிகம்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in