இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் சேதமடைந்த ராமேசுவரம் மீனவர்களின் படகு.
இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் சேதமடைந்த ராமேசுவரம் மீனவர்களின் படகு.
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 600 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்ததுடன் தங்களது ரோந்துப் படகு மூலம் ராமேசுவரம் மீனவர்களின் படகு மீது மோதி விரட்டியடித்தனர். இதில் படகின் பக்கவாட்டில் சேதமடைந்தது. இதனால், அச்சமடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

இதுகுறித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் குறித்து மீன்வளத் துறை மற்றும் மெரைன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in