Published : 10 Oct 2022 06:43 AM
Last Updated : 10 Oct 2022 06:43 AM
சென்னை: வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டினார். சென்னை தரமணியில் உள்ள தனியார் ஓட்டலில் சிறந்த கராத்தேமாஸ்டர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்று 50 சிறந்த கராத்தே மாஸ்டர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர், ஆளுநர் தமிழிசைசெய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிகள், கல்லூரிகளில் இளம் தலைமுறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுய நம்பிக்கை பெறும் வகையில் தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும். திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக மக்கள் நம்புகிறார்கள். திருவள்ளுவர் அவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார். ராஜராஜ சோழன் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நோக்கத்தோடு திருக்குறளை படித்து வருகிறார். ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஆதி முனீஸ்வரன் கோயில், ஆதி மகாதேவி என கடவுள் வணங்கப்படுகிறார்கள். அந்த அர்த்தத்தில் ஆதி பகவன் என எழுதப்பட்டிருக்கலாம் என தமிழக ஆளுநர் கூறியுள்ளார். அண்ணன் கட்சியின் தலைவர், தங்கை கட்சியின் துணை பொதுசெயலாளர் என வாரிசு அரசியலை நோக்கி திமுக சென்று கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஒரு பெண்ணாக பதவிக்கு வருவது சிரமம். எனவே,திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகோதரி கனிமொழிக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT