Published : 10 Oct 2022 07:05 AM
Last Updated : 10 Oct 2022 07:05 AM
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலத்தின் 125-வது பிறந்தநாள் விழா சென்னை காந்திமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், தலைவர்கள் பலர் பங்கேற்று அவரது உருவப் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக மக்களால் பெரியவர், தியாக சீலர் என போற்றப்படுபவர் முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம். இவரது 125-வது பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பக்தவத்சலம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, உருவப் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் தமிழ்நாடுகாங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்று, பக்தவத்சலம் படத்துக்கு மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்தநாள் விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று, பக்தவத்சலம் உருவப் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT