‘100’ மற்றும் காவல் நிலையங்களுக்கு தொலைபேசியில் 2.21 லட்சம் புகார்கள்: போலீஸார் பற்றியும் புகார் அளிக்கலாம்

‘100’ மற்றும் காவல் நிலையங்களுக்கு தொலைபேசியில் 2.21 லட்சம் புகார்கள்: போலீஸார் பற்றியும் புகார் அளிக்கலாம்
Updated on
1 min read

கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மோதல் போன்ற குற்றங்கள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடி யாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார் கள். போலீஸாரின் உடனடி நடவடிக்கை தேவைப்பட்டாலோ, தொடர்புக்கான தொலைபேசி எண்கள் தெரியாவிட்டாலோ ‘100’ என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிப்பார்கள். இது காவல் கட்டுப்பாட்டு அறை எண் ஆகும். கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீஸார், சம்பந்தப் பட்ட இடத்தில் ரோந்துப் பணியில் இருக்கும் போலீஸாருக்கு உடனே தகவல் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு இவ்வாறு காவல் நிலையங்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 2 லட்சத்து 21 ஆயிரத்து 661 புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரி கள் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட வர்கள் உடனடி நடவடிக்கைக்கு ‘100’ல் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் உள்ளவர்கள் 98409 83832 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். 95000 99100 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பலாம். cop@vsnl.net என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம். சென்னை காவல் நிலையங்களில் போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட் டாலோ, ஆய்வாளர்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டாலோ, போலீஸார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டாலோ 044 2561 5086 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in