'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' - 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது

கோப்புப் படம் | டிஜிபி சைலேந்திர பாபு
கோப்புப் படம் | டிஜிபி சைலேந்திர பாபு
Updated on
1 min read

சென்னை: தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், முதல் 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். மேலும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள். 110 ரவுடிகள் மீது பிடியானை நிலுவையில் இருந்தது. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ள 979 ரவுடிகள் மீது நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. இதை அவர்கள் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கபடுவார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in