பொங்கலுக்கு 10 சிறப்பு ரயில்கள்

பொங்கலுக்கு 10 சிறப்பு ரயில்கள்
Updated on
1 min read

வரும் ஆண்டில் பொங்கல் பண் டிகை ஜனவரி 13-ம் தேதி தொடங்கு கிறது. 13-ம் தேதி வெள்ளிக் கிழமை போகி, 14-ம் தேதி சனிக் கிழமை பொங்கல், 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாட்டுப் பொங் கல், 16-ம் தேதி திங்கட்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப் படுகிறது. 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால், பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் கடந்த செப் டம்பர் மாதத்திலேயே டிக்கெட் களை முன்பதிவு செய்துவிட்டனர்.

இதனால், தென் மாவட்டங் களுக்கு செல்லும் விரைவு ரயில் களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் 350-ஐ தாண்டியுள்ளது. டிக்கெட் கிடைக் காதவர்கள், சிறப்பு ரயில்கள் அறி விப்பை எதிர்பார்த்து காத்திருக்கின் றனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தென்மாவட்டங்களுக்கு வழக்க மாக செல்லும் விரைவு ரயில்களில் பொங்கல் முன்பதிவு முடிந்துள்ளது. இதற்கிடையே கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை யொட்டி எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சுமார் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கான இறுதிப் பட்டியல் முடிவு செய்தபின்னரே, முழுமையாக அறிவிக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in